Lankaputhra Development Bank

முகப்பு உற்பத்திகளும் சேவைகளும் கடன் மற்றும் முற்பணம் செய்திட்ட நிதியளிப்பு விசேட செய்திட்ட கடன் வாணிப மட்டத்திற்குப் பாற்பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கான கடன் திட்டம்

இக் கடன் திட்டம், நடுத்தர, பெரிய பாற்பண்ணையாளர்கள் வர்த்தக ரீதியில் தமது பாற்பண்ணை நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கு தேவையான கடன் வசதிகளைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கின்றது. இந்த விசேட கடன் திட்டம் இலங்கை மத்திய வங்கியினால் பின்வரும் குறிக்கோள்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது:

  • நடுத்தர தொழில்முயற்சியாளர்களை, பாற்பண்ணையிலிருந்து பாலைப் பதனிடும் வரையிலான வர்த்தக ரீதியிலான பாற்பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிப்பது.
  • பெருந்தோட்டக் கம்பனிகளை, பாற்பண்ணைத் தொழிலில் ஈடுபட ஊக்குவிப்பதன் மூலம் குறைவாகப் பயன்படுத்தப்படும் தோட்டநில வளங்களை அபிவிருத்தி செய்வது.
  • பால் வழங்கல் சங்கிலியில் குறிப்பாகப் பால் பண்ணைகள் பால் கூட்டுறவுச் சங்கங்கள். பதனிடுவோர், பாற்பொருட்களைச் சந்தைப்படுத்துவோர் ஆகியோரின் நடவடிக்கைகளை வர்த்தக ரீதியாக்குவதற்கு உற்சாகமளிப்பது.

தகுதியான திட்டங்கள்

  • பாற்பசுக்களை விலைக்கு வாங்குதல்
  • தொழுவங்கள், கட்டிடங்கள், நீர் வழங்கல் தொகுதிகள் (நீர் விசிறல், நீர்க்குழாய்கள்) கிணறுகள் அமைத்தல்.
  • புல், வெட்டுப்புல் பயிரிடுதல்.
  • புதிய பண்ணைகள் அமைத்தல்
  • பண்ணைகளை அபிவிருத்தி செய்தல்
  • உயிர்-வாயுத் தொகுதிகள் அமைத்தல்
  • பாற் பொருட்கள் உற்பத்தி / பால் பதனிடுதல்
  • டிராக்டர்கள், நீர்பம்பிகள், குளிரூட்டிகள், பாலாடை வேறாக்கி, பால் கறக்கும் இயந்திரங்கள், புல்-துண்டாக்கி இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்தல்.
  • பால், பால் பொருட்களைக் கொண்டு செல்லுதல், பத்திரப்படுத்தி வைத்தல்.
  • பாற்பண்ணை அபிவிருத்தி அல்லது பசும் பாலினை உட்கொள்ளும் கலாச்சாரத்தினை ஊக்குவிப்பதுடன் நேரடியாகத் தொடர்புடைய ஏனைய வேறு புதிய நடவடிக்கைகள்.
  • மிருக வைத்தியர்கள் / கால்நடை உத்தியோகத்தரால், பால் உற்பத்தி, பாற் பொருட்களின் தரம் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்காகச் சிபார்சு செய்யப்பட்ட ஏனைய வேறு புதிய நடவடிக்கைகள்.

மீளச் செலுத்தும் காலம்

6 மாதங்கள் கருணைக் காலத்தை உள்ளடக்கிய, ஆகக் கூடிய 5 வருடங்கள்.

கடன் தொகை

அதியுயர் கடன்தொகை ரூ. 20 மில்லியன்

பிணையங்கள்

வியாபாரத்தின் இடர்த் தன்மையைக் கருத்திற் கொண்டு தேவைப்படும் பிணையங்கள் பற்றி வங்கியால் தீர்மானிக்கப்படும்.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்