Lankaputhra Development Bank

பணம் பெற்றுக்கொள்வது கஷ்டமாகவுள்ள, புதிய வியாபாரிகளுக்காகவும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் செய்திட்டச் சாத்தியத்தின் அடிப்படையில் கடன் வசதிகளை வழங்குவதற்காக இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிதி உதவிகள் மற்றும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் வழிகாட்டலுடன், நடுத்தர அல்லது அதற்கு மேற்பட்ட மட்டங்களுக்கு அபிவிருத்தி செய்யப்படக்கூடிய புதிய சிறு தொழில் முயற்சியாளர்களை குறைந்தபட்சம் சிறு தொகையினரையாவது இனம் காண்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கடன் பெறுவதற்குள்ள தகைமை

  • செய்திட்டத்தில் முழு நேர அடிப்படையில் ஈடுபடுவதைக் எடுத்துக்காட்டுவதுடன் தொழில் முயற்சியாளாராக வளர்வதற்கு விருப்பம் இருக்க வேண்டும்.
  • திட்டத்தினை ஆரம்பிப்பவர்கள் 18 – 35 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர்களாக இருக்க வேண்டும்.
  • வியாபார நடவடிக்கைகளுக்கென முன்னர் பெற்றுக்கொண்ட கடனாக 250,000/- ரூபாவுக்கு மேற்பட்ட வங்கிக் கடன் இருத்தலாகாது.
  • லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுள்ள செய்திட்டமொன்று இருக்க வேண்டும்.
  • ஒரு மில்லியன் (01) ரூபாவுக்குக் குறைந்த அளவில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். அதிகரிக்கும் பணத்தை தாம் பொறுப்பேற்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
  • செய்திட்ட செலவில் குறைந்தபட்சம் 20% தனது பங்களிப்பாக வழங்க வேண்டும்.(அசையும்/அசையா சொத்துக்கள்). செய்திட்டத்திற்கு விசேடமாகப் பயன்படுத்துவதாக இருந்தால் காணிகளும் கட்டிடங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

கடன் அளவு

500,000/- ரூபாவிலிருந்து 1,000,000/-வரை

பிணை

செய்திட்ட சாத்தியக்கூறு மற்றும் ஏனைய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரிய பிணைகளுக்குப் புறம்பாக இக்கடன்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மீளச் செலுத்தல்

ஆகக்கூடியது 6 வருடங்கள் (ஆகக்கூடிய 01 வருட சலுகைக்காலம் உட்பட)

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்