Lankaputhra Development Bank

முகப்பு வாடிக்கையாளரின் பாராட்டுக்கள்

வாடிக்கையாளர்களின் பாராட்டுக்கள்

விவசாயம்

திருமதி. ஆர்.டீ.சி. வீரக்கொடிக்குரிய காணியின் பயனை அதிகரிக்கும்வகையில் வாழைப் பயிர்ச் செய்கைகளுடன் அன்னாசி போன்ற ஏனைய பயிர்களைக் கலந்து செய்யும் பயிர்ச் செய்கைக்காக எமது பொலனறுவைக் கிளை நிதிவசதிகளை வழங்கியுள்ளது. தமது பண்ணைக்கு அவ்வப்போது வருகைதருகின்ற விவசாய திணைக்கள பணியாட்டொகுதி அங்கத்தினர்கள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு அவர் தனது பயிர்ச்செய்கையை மிகவும் அக்கறையுடன் காத்துக்கொள்கிறார்.

தொடர்ச்சியாக அவருக்கு வழங்கப்படுகின்ற உதவிக்கு திருமதி வீரக்கொடி வங்கிக்கும் வங்கி உத்தியோகத்தர்களுக்கும் பெரிதும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

விவசாயிகள் நவோதயம்

"ஒவ்வொரு விவசாயிக்கும் மூன்று சக்கர உழவு இயந்திரமொன்றைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் புது யுகம் ஒன்றைப் படைத்தல்" என்ற தலைப்பிலான கடன் திட்டமொன்று வரையறுக்கப்பட்ட நுவரெலியா விவசாய கூட்டுறவு சங்கம், நுவரெலியா மாவட்ட வர்த்தக சம்மேளனம் என்பவற்றுடன் ஒருங்கிணைந்து லங்காபுத்ர அபிவிருத்தி  வங்கியினால் 2011.08.05ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கண்டி லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி கிளையின் நடமாடும் சேவையிலிருந்து சலுகை நிபந்தனைகளின் கீழ்கடன் பெற்றுக்கொண்ட 60 தொழில் முயற்சியாளர்களில் ஒருவரான திரு.எஸ்.வாசுதேவன் புதிதாகப் பெற்றுக்கொண்ட இயந்திரத்தைப் பயன்படுத்தி தமது பண்ணையில் பணிகளை மேற்கொண்டு பிரதேசத்தில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறைபற்றிய பிரச்சினைக்குத் தீர்வு தேடிக்கொண்டுள்ளார்.

 

பால் பசு வளர்ப்பு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் அம்பாந்தோட்டை கிளை பிரதேசத்தின் கைத்தொழிலாளர்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் நிதி வசதிகளை வழங்குவதில் முன்னணி வகிக்கிறது. இந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் அங்குணகொலபெலஸ்ஸ திரு. ஏ.டப். லீலசேன பஹலகம 20 வருட அனுபவமுள்ள பாற்பண்ணை விவசாயியாவார். 30 பசுக்களைக் கொண்டுள்ள பண்ணைக்கு உரிமையாளரான இவர் தனது தந்தையிடமிருந்து அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

திரு.லீலசேன சிறிய அளவில் தமது பாற்பண்ணையை ஆரம்பித்து, எமது நிதி உதவியைப் பெற்று 100 கலப்பின பசுக்களைக்கொண்ட புதிய பண்ணைவரை தமது பண்ணையை முன்னேற்றினார். அவர் இது தொடர்பாக எமது வங்கிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தமது குடும்ப அங்கத்தினர்களின் உதவியுடன் வெற்றிகரமான ஒரு வியாபாரத்தை நடாத்துகிறார். அவர் மாதமொன்றுக்கு சுமார் 1,800 லீட்டர் பால் உற்பத்திசெய்து தயிர் தயாரித்து சந்தைக்கு தயிர் விநியோகம் செய்கின்றார்.

 

நுண் தொழில் முயற்சியில் ஈடுபடுத்துதல்

திரு. ஏ.ஏ. வசந்த குமாரவுக்குரிய அவரே முகாமைப்படுத்துகின்ற 'மெக்ரோ பிளாஸ்ரிக்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற பொலித்தீன் மீள்சுழற்சி செய்திட்டத்திற்கு லங்காபுத்ர வங்கியில் நிதிவசதிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் தாம் கொள்வனவுசெய்த புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக்கைப் மூலப்பொருளாக பயன்படுத்தி பிளாஸ்ரிக் சார்ந்த பொருட்களின் உற்பத்தி அளவை அதிகரித்துக்கொண்டுள்ளார். இத்திட்டம் எட்டுபேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அத்துடன், சூழல் நேயம்கொண்ட செயற்பாட்டுக்கு உதவி செய்து, உரிமையாளரின் வருமானத்தையும் அதிகரித்துள்ளது. அவர் மிகக் குறைந்த மூலதனத்துடன் 2006ஆம் ஆண்டில் உற்பத்தியை ஆரம்பித்துள்ளார். இக்கைத்தொழில் 2011ஆம் ஆண்டளவில் நல்லதொரு நிலைக்கு வந்துள்ளது.

 

சுற்றுலாத்துறை

வடமேல் வலயத்தில் சிறு மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்களுக்கு நிதிவசதிகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்கின்ற நிறுவனங்களுக்கிடையே எமது வென்னப்புவ கிளையும் உள்ளடங்குகின்றது. பவழப் பாறைகளையும் டொல்பின் மீன்களையும் பார்த்தல் போன்ற உல்லாசப் பயணத்துக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் ஊக்கமுள்ள தொழில் முயற்சியாளரான திரு. ஷெல்டன் பர்னாந்து ஆரம்பித்த புதிய வியாபாரமான சிலாபம் சிட்டி ஹோட்டல் வியாபரத்துக்கு நிதிவசதிகளை எமது வங்கி வழங்கியுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து புத்தளம்வரை விரிந்து பரந்துள்ள வனப்புமிக்க கடற்கரையோரத்தின் இயற்கை அழகை இரசிக்க வருகின்ற உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு இந்த ஹோட்டல் பிரபல்யமடைந்துள்ளது. சுவையான உணவு, படகு சவாரி, களியாட்டம், வாடிக்கையாளர் மீது காட்டும் கவனிப்பு மற்றும் ஏனைய கவர்ச்சிகரமான செயற்பாடுகள் தொடர்பில் சிலாபம் சிட்டி ஹோட்டல் பெயர்பெற்றுள்ளது. மேலும், மங்கள வைபவங்கள் மற்றும் ஏனைய முக்கியமான வைபவங்களுக்கு புகழ்பெற்ற இடமாக இந்த ஹோட்டல் விளங்குகின்றது.