Lankaputhra Development Bank

இது சிறு மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான வட்டி வீதம் மற்றும் நிபந்தனைகளின் கீழ் கடன் வழங்குவதற்கென தயாரிக்கப்பட்ட கடன் திட்டமாகும். புதிய திட்டமொன்றை ஆரம்பித்தல், இருக்கின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்தல், தொழிற்சாலை கட்டிடங்களையும் இரசாயன கூடங்களையும் நிர்மாணித்தல், கைத்தொழில்களுக்காக இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்தல் என்பவற்றுடன் விசேட திட்ட தொழில்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இக்கடனைப் பயன்படுத்த முடியும்.

நோக்கங்கள்

  • கிராமிய பொருளாதாரத்தை உயர்த்துவதன்மூலம், வறுமையையும், பிரதேசங்களுக்கிடையிலான வருமானச் சமநிலையின்மையையும் குறைத்து தொழில் உற்பத்தியை வளர்த்தல்.
  • புதிய செய்திட்டங்களை ஊக்குவித்தல், இருக்கின்ற செய்திட்டங்களை சர்வதேச தரத்துக்கு விரிவாக்குவதற்காக அபிவிருத்தி நிதியிடல் வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல்.

யாருக்காக?

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக.

கடன் பெற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான பிரிவுகளும் உப பிரிவுகளும்

பிரிவுகள் உப பிரிவுகள்
விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்திக் கைத்தொழில் கடற்றொழில்
தெங்குப் பயிர்ச்செய்கை சார்ந்த உற்பத்திகள்
அரிசி ஆலைகள்
பால் பசு வளர்ப்பு
ஏனைய விவசாயம் சார்ந்த உற்பத்திகள்
ஏனையவை
உற்பத்தி / கைத்தொழில் ஆடைகள்
தளபாட மற்றும் மரத் தளபாட உற்பத்திகள்
தோல்/ரபர் உற்பத்திகள் மற்றும் பாதணிகள்
பிளாஸ்ரிக்
உருக்கு மற்றும் உலோகம்
இரசாயன மற்றும் கனிப்பொருட்கள்
பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
அச்சிடல் மற்றும் வெளியீடு
உணவு மற்றும் பானங்கள்
மின்னியல் மற்றும் இலத்திரனியல்
வலுசக்தி பிறப்பாக்கி
ஏனையவை
சேவைகள் சுகாதார, கல்வி சேவை
நிதியிடல் மற்றும் வியாபாரம்
சுற்றுலா மற்றும் ஹோட்டல்
ஏனைய சேவைகள்
உட்கட்டமைப்பு அபிவிருத்தி நீர் மின்சாரம்
சிறிய நீர் மின்சார திட்டம்
நெடுஞ்சாலைகளை அமைத்தல்
கட்டிடங்களை அமைத்தல்
ஏனையவை

தகுதியான கடன் வகைகள்

மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ், கீழே காட்டப்பட்டுள்ள காரணங்களுக்கென கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  • விசேட செய்திட்டங்களுக்காக உபகரணங்கள், இயந்திரங்கள் கருவிகள் மற்றும் கனரக வாகனங்களைக் கொள்வனவு செய்தல்
  • தெரிவுசெய்யப்பட்ட செய்திட்டங்களுக்காக தொழிற்சாலைகள், இரசாயனகூடங்கள், ஹோட்டல் தொகுதிகள் சார்ந்த நிர்மாணங்களுக்காக.
  • இயந்திரங்களையும் உபகரணங்களையும் பொருத்துதல்
  • முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.
  • விசேட செய்திட்டத்திற்குத் தேவையான தொழில் நிபுணர்களின், மற்றும் சிறப்பறிஞர்களின் சேவையைப் பெற்றுக்கொள்தல்.

பொது நிபந்தனைகள்

  • மேல் மகாணத்திற்கு வெளியே அமைக்கப்படும் செய்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • செய்திட்டம் உள்ளூர் உற்பத்தியை அடிப்படையாகக்கொண்ட திட்டமாக இருக்க வேண்டும். அதன்மூலம் பிரதேசத்தின் மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
  • மொத்த தேசிய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உத்தேச செய்திட்டம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
  • வாடிக்கையாளர் குறைந்தபட்சம் செய்திட்ட செலவிலிருந்து 30% பொறுப்பேற்க வேண்டும்.
  • செய்திட்டத்திற்குக் கிடைக்கும் ஆகக்கூடிய கடன் தொகை 20 மில்லியன் ரூபாவாகும்.

மீளச் செலுத்தல்

ஆகக்கூடியது 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை

கடன் அளவு

ஆகக்கூடியது 20 மில்லியன் ரூபா.

பிணை

வியாபாரத்தில் இருக்கும் இடர்நிலையைக் கவனத்திற்கொண்டு வங்கி பிணையின் தன்மையை தீர்மானிக்கும்.

வட்டி வீதம்

வட்டி வீத அட்டவணையைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்